Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'காலா கரிகாலனின் மனைவி ஒரு முஸ்லீம் பெண்ணா?

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2017 (23:00 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு மும்பை தாராவி பகுதியில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ஹூமா குரேஷி, ஒரு முஸ்லீம் பெண் வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.



 


ஹூமா குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படக்குழுவினர் அளித்த ஸ்கிரிப்ட் பேப்பரை வெளியிட்டுள்ளார். அதில் ஜரீனா என்ற கேரக்டர் வருவதாகவும், அந்த கேரக்டரில் நடிக்க தான் தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ரஜினிகாந்த் முஸ்லீம் போல குல்லா அணிந்த புகைப்படம் ஒன்று சமீபத்தில் லீக் ஆகிய நிலையில், தற்போது நாயகி கேரக்டர் பெயர் ஜரீனா என்று இருப்பதால் ரஜினி, ஹூமா இருவருமே முஸ்லீம் கேரக்டர்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் பீம்ஜி என்ற கேரக்டரும் இருப்பதாக அந்த ஸ்கிரிப்ட் பேப்பரில் உள்ளது. பீம்ஜி என்பது பீமாராவ் ராம்ஜி என்ற பெயரின் சுருக்கம் என்பதும், இதுதான் சட்டமேதை அம்பேத்கரின் உண்மையான பெயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ரஞ்சித்தை திரையுலகில் உள்ளவர்கள் பீம்ஜி என்றே அழைப்பதுண்டு. அந்த வகையில் பீம்ஜி கேரக்டரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ‘விடாமுயற்சி’ என்ன ஆச்சு?

விஷாலுக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

முட்டுக்கட்டை போட்ட லைகா.. அதிர்ச்சியில் ஷங்கர்! கேம் சேஞ்சர் வெளியாவதில் புதிய சிக்கல்!

கமெண்டில் வந்து கண்டமேனிக்கு பேசிய நபர்கள்! புயலாய் மாறிய நடிகை ஹனிரோஸ்! - 27 பேர் மீது வழக்கு!

இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments