Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வி.எஸ்.ஓ.பி. - சரக்கு இல்லாத ராஜேஷ் படமா...?

வி.எஸ்.ஓ.பி. - சரக்கு இல்லாத ராஜேஷ் படமா...?
, செவ்வாய், 25 நவம்பர் 2014 (12:02 IST)
டாஸ்மாக் விற்பனை தமிழகத்தில் அதிகரிக்க இயக்குனர் ராஜேஷும் ஒரு முக்கிய காரணம். முதல் படம் சிவா மனசுல சக்தியை டாஸ்மாக்கின் விளம்பரப் படம் போலவே எடுத்தார். டாஸ்மாக்வாசிகளின் தேசியகீதமான மச்சி... ஒரு குவார்ட்டர் சொல்லேன் ராஜேஷின் சிவா மனசுல சக்தி தந்த அருள்கொடை.
 
ராஜேஷின் படத்தில் சந்தானம் சரக்கு என்றால் டாஸ்மாக் சைடிஷ். அந்த பாரம்பரியத்தை தனது புதிய படத்திலும் ராஜேஷ் கைவிடவில்லை.
 
தனது முதல் படம் சிவா மனசுல சக்திக்கு எஸ்எம்எஸ் என்றுதான் பெயர் வைக்க நினைத்தார். ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் வரிச்சலுகை கிடைக்காது என்பதால் எஸ்எம்எஸ்ஸின் விரிவான சிவா மனசுல சக்தியை பெயராக்கினார். அதேபோல் ஒரு கல் ஒரு கண்ணாடி (ஓகே ஓகே). ஆர்யா, தமன்னா நடிக்கும் தனது புதிய படத்துக்கு வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க என்று பெயர் வைத்திருக்கிறார். சுருக்கமாக வி.எஸ்.ஓ.பி. டாஸ்மாக்கில் அதிகம் விற்கும் சரக்கின் பெயர்.
 
டாஸ்மாக் சார்பில் தமிழக அரசு விழா எடுத்தால் சிறப்பு விருந்தினராகும் எல்லா தகுதியும் உள்ள ஒரேநபர் ராஜேஷ். வாழ்க அவரது ஆல்கஹால் பக்தி.

Share this Story:

Follow Webdunia tamil