Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கமல்

மீண்டும் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கமல்

மீண்டும் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கமல்
, புதன், 18 மே 2016 (10:59 IST)
கமல் நடித்த தூங்காவனம் படத்தை இயக்கிய கமலின் உதவி இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா மீண்டும் கமல் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.


 
 
குறைந்த தினங்களில் எடுக்கப்பட்டு லாபம் சம்பாதித்த பாபநாசம் படம் கமலை நிறையவே மாற்றியுள்ளது. 
 
குறைந்த தினங்கள், குறைந்த செலவு என்பதே இப்போது அவரது தாரக மந்திரம்.
 
சபாஷ் நாயுடு படத்தில் கவனம் செலுத்தி வருகிறவர், அப்படத்தை விரைவாக முடித்து வரும் ஆகஸ்டில் அடுத்தப் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். அந்தப் படத்தை தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார். குறைந்த தினங்களில் படத்தை முடித்து தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதாக திட்டம். 
 
சபாஷ் நாயுடு படத்தின் தயாரிப்பு நிர்வாகியாக தற்போது ராஜேஷ் எம்.செல்வா பணிபுரிந்து வருவது முக்கியமானது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முத்தின கத்திரிக்கா விலை போகுமா...?