Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா படத்தில் ராஜேந்திரனுக்கு ஓபனிங் சீன்

சூர்யா படத்தில் ராஜேந்திரனுக்கு ஓபனிங் சீன்
, சனி, 28 மார்ச் 2015 (13:10 IST)
ஹீரோவுக்குதான் ஓபனிங் சீன் பில்டப்புகள் வைக்கப்படும். ஹீரோவை தவிர்த்தால் முன்னணி காமெடி நடிகருக்கு. 
 
நான் கடவுள் ராஜேந்திரன் இப்போது தமிழின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் (ஆகி வருகிறார்). டார்லிங் படத்தை ராஜேந்திரனை வைத்து விளம்பரப்படுத்தி ஓட்டினார்கள் என்றால், இவனுக்கு தண்ணில கண்டம் படத்தின் போஸ்டர், விளம்பரம் என அனைத்திலும் ராஜேந்திரன்தான் டாலடித்தார். 
 
சென்ற வார சென்னை பாக்ஸ் ஆபிஸில் இவனுக்கு தண்ணில கண்டம் முதலிடத்தைப் பிடித்ததுக்கு காரணம் ராஜேந்திரன் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ராஜேந்திரனின் இந்த திடீர் மாஸை, மாஸ் படத்தில் பயன்படுத்தியுள்ளார் வெங்கட்பிரபு. இதில் ராஜேந்திரனுக்கு ஓபனிங் சீனெல்லாம் வைத்து அசத்தியிருக்கிறார் வெங்கி. ராஜேந்திரன், சூர்யா காம்பினேஷன் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil