மகேஷ் பாபு- ராஜமௌலி படத்தில் இணையும் வெளிநாட்டு நடிகை!

vinoth
வியாழன், 11 ஜனவரி 2024 (07:34 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த படம் இண்டியானா ஜோன்ஸ் போல ஒரு சாகசப் படம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பெரும்பாலான காட்சிகள் காடுகளில் படமாக்கப்பட உள்ளதாகவும், ஏராளமான விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் வெளிநாட்டில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி.

இந்நிலையில் ஜனவரி இறுதியில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் காட்சிகளை ராஜமௌலி அமேசான் காடுகளில் படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக இந்தோனேஷியாவை சேர்ந்த நடிகை செல்சீ இஸ்லன் நடிக்க உள்ளதாகவும் சமீபத்தில் அவருக்கு ராஜமௌலி டெஸ்ட் ஷூட் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments