Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி 3-ஆம் பாகம் எடுக்க ஆர்வமாக உள்ள இயக்குநர் ராஜமௌலி!

பாகுபலி 3-ஆம் பாகம் எடுக்க ஆர்வமாக உள்ள இயக்குநர் ராஜமௌலி!

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (16:32 IST)
இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமான பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வசூலையும், நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.


 
 
இயக்குநர் ராஜமௌலி பாகுபலி முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அதன் இரண்டாம் பாகத்தை மிகவும் நேர்த்தியாக பிரமாண்டமாக உருவாக்கி வெளியிட்டார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
 
இதனையடுத்து இந்த படத்தின் மூன்றாம் பாகம் எடுக்கப்படுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் பாகுபலி மூன்றாம் பாகம் குறித்து ஏற்கனவே ராஜமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 2015-ஆம் ஆண்டே அவர், பாகுபலி 3-ஆம் பாகம் எடுக்க ஆர்வமாக இருக்கிறேன். விரைவில் அது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனது தந்தை இதற்கான கதையை தயார்செய்துவிட்டால், படம் நிச்சயம் எடுக்கப்படுவது உறுதி எனக் கூறியுள்ளார்.
 
பாகுபலி இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பாகுபலி 3-ஆம் பாகம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸீரோ பேலன்ஸில் குடும்பம் நடத்துவது எப்படி? உண்மையை நகைச்சுவையாக சொன்ன ‘குடும்பஸ்தன்’! - திரை விமர்சனம்!

மதிப்புமிக்க பத்ம விருதை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. அஜித் அறிக்கை..!

இசைக் கச்சேரியில் செம்ம vibe-ல் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்பட தொகுப்பு!

கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு?... பேச்சுவார்த்தை நடத்தும் இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments