Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜமெளலியின் பாகுபலி 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2017 (12:22 IST)
ராஜமெளலி இயக்கியுள்ள பாகுபலி 2 படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது. எஸ்.எஸ். ராஜமெளலி  இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாகுபலி படம் சூப்பர் டூப்பர்  ஹிட்டானது. இதையடுத்து அவர் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்.

 
முதல் பாகத்தை போன்றே இரண்டாம் பாகமும் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகிறது.  இந்நிலையில் சிவராத்திரி நாளான இன்று படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரமாண்ட வெற்றி பெற்ற  பாகுபலியின் இரண்டாம் பாகம் பரபரப்பாக தயாராகி வருகிறது. பாகுபலியின் சாதனையை முறியடிப்பதுதான் இரண்டாம்  பாகத்தின் இலக்கு.

 
பாகுபலி படம் ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்தது. இதனை தொடர்ந்து பாகுபலியின் 2-ம் பாகமான,  'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று  வருகின்றன.
 
நேற்று விசேஷ தினம் என்பதால் பாகுபலி 2 படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரை ராஜமவுலி  ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் போஸ்டர்... பலி பலி பலி ரா பலி... சாகோரே பாகுபலி... என பதுவிட்டுள்ளார்.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments