Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோகன் ராஜாவுக்கு ஆந்திராவின் பிரின்ஸ் அனுப்பிய வாழ்த்துச் செய்தி

மோகன் ராஜாவுக்கு ஆந்திராவின் பிரின்ஸ் அனுப்பிய வாழ்த்துச் செய்தி
, திங்கள், 14 செப்டம்பர் 2015 (14:12 IST)
தனி ஒருவன் படத்துக்காக எட்டு திசைகளிலிருந்தும் வாழ்த்துகள் குவிகிறது, மோகன் ராஜாவுக்கு. அனைத்தும் மாணிக்கம் என்றாலும் கோஹினுருக்கு மதிப்பு அதிகம்தானே. வந்து குவிந்த வாழ்த்துகளில் சிலவற்றை மட்டும் சிறப்பாக கருதுகிறார் மோகன் ராஜா. அதில் ஒன்று, ஆந்திராவின் பிரின்ஸ் நடிகர் மகேஷ் பாபு அனுப்பிய எஸ்எம்எஸ் செய்தி.

தனி ஒருவன் படத்தைப் பார்த்த மகேஷ் பாபு, உங்களிடம் எதாவது கதையிருந்தால் அதில் நடிக்க விரும்புகிறேன் என குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். ஆயிரம் பாராட்டைவிட மதிப்பு வாய்ந்ததில்லையா இந்த செய்தி.

நல்ல கதையுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன் என பதிலளித்துள்ளார் மோகன் ராஜா.

வெற்றி இல்லாத வாசல்களையும் திறக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil