Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2.0 படத்துக்காக கமிஷனர் அலுவலமாக மாற்றப்பட்ட ரயில்வே அலுவலகம்

2.0 படத்துக்காக கமிஷனர் அலுவலமாக மாற்றப்பட்ட ரயில்வே அலுவலகம்
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (14:45 IST)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் 2.0 படத்துக்காக ரயில்வே அலுவலகம் கமிஷனர் அலுவலகமாக மாற்றப்பட்டது.
 

 
ரஜினி யுஎஸ்ஸில் ஓய்வு எடுத்த நேரத்தில் ரஜினி சம்பந்தப்படாத காட்சிகளை படமாக்கினார் ஷங்கர். நேற்று சென்னை அயனாவரத்தில் 2.0 படத்தின் படப்பிடிப்பு நடந்தது. 
 
அயனாவரம் ஜாயின்ட் ஆபிஸ் ரயில்வே அலுவலகத்தை படப்பிடிப்புக்காக போலீஸ் கமிஷனர் அலுவலமாக மாற்றியிருந்தனர். மக்கள் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுப்பது போன்ற காட்சி நேற்று படமாக்கப்பட்டது. 
 
நேற்றைய படப்பிடிப்பில் ரஜினி, அக்ஷய், எமி ஜhக்சன் போன்ற முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. துணை நடிகர்களை வைத்து இந்தக் காட்சியை ஷங்கர் படமாக்கினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல தயாரிப்பாளரும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் மரணம்