Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய தோற்றம், புதிய கொள்கை, புதிய உற்சாகம்.... பிரமாதம் ராய்

புதிய தோற்றம், புதிய கொள்கை, புதிய உற்சாகம்.... பிரமாதம் ராய்
, திங்கள், 21 ஜூலை 2014 (11:34 IST)
லட்சுமி ராய் என்ற பெயரை ராய் லட்சுமி என்று மாற்றியுள்ளார். இரும்பு குதிரை படத்துக்காக பதினைந்து கிலோ அளவுக்கு இளைத்துள்ளார். பார்க்க லட்சுமி ராயின் தங்கச்சி போலிருக்கிறார் ராய் லட்சுமி.
அதர்வா, ப்ரியா ஆனந்த் நடித்து வரும் இரும்பு குதிரையில் ரேஸ் வீராங்கனையாக ராய் லட்சுமிக்கு வித்தியாசமான வேடம். இந்த கதாபாத்திரத்துக்காக உடல் எடையை கணிசமாக குறைத்து வயதையும் குறைத்துள்ளார் ராய் லட்சுமி. இது தவிர அரண்மனை படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியாவுடன் இவருக்கும் முக்கிய வேடம்.
webdunia
மலையாளத்தில் மீண்டும் மம்முட்டி ஜோ‌டியாகியிருக்கிறார். படம் ராஜாதிராஜா. 2010 -ல் வெளியாகி வெற்றி பெற்ற மம்முட்டியின் போக்கிரிராஜா போல ஆக்ஷன் பின்னணியில் ராஜாதிராஜா தயாராகிறது. 
 

அப்படியே தெலுங்குக்கு வந்தால் அங்கும் ஒரு படம். கன்னடத்திலும் ஒன்று. எல்லா மொழிகளிலும் நாயகியாக நடிக்க, தமிழில் மட்டும் இரண்டாவது நாயகி அல்லது துக்கடா வேடம்.
webdunia

இதனால் புதிய கொள்கை ஒன்றை வகுத்துள்ளார். நல்ல கதை, கேரக்டர் அமைந்தால் புதிய இயக்குனர்கள் புதுமுக இளம் நடிகர்கள் என அனைவருடனும் இணைந்து பணியாற்றுவதுதான் அந்தக் கொள்கை.
webdunia

ராய் லட்சுமியின் புதிய ஸ்லிம் தோற்றம் எந்த இளம் நடிகருடனும் ஜோ‌டிசேர்வதற்கும் ஏற்றது.
 

 
ராய் லட்சுமி தயார்... அறிமுக நடிகர்கள் தயாரா?
webdunia

Share this Story:

Follow Webdunia tamil