எல் ஆர் ஈஸ்வரி பாடலை பாராட்டிய ரஹ்மான் – மூக்குத்தி அம்மன் குழு உற்சாகம்!

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (17:45 IST)
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் மூத்த பாடகர் எல் ஆர் ஈஸ்வரி பாடியுள்ள ஆடிக்குத்து பாடலை பாராட்டியுள்ளார் ரஹ்மான்.

நயன்தாரா நடிப்பில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வந்த 'மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நாகர்கோவில் பகுதியில் நடைபெற்று முடிவடைந்தது.  கடந்த மே மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கினாள் தள்ளி சென்றது. இதனால் வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு "மூக்குத்தி அம்மன்" படம் விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் பழம்பெரும் பாடகி எல் ஆர் ஈஸ்வரி தன்னுடைய 80 ஆவது வயதில் ஆடிக்குத்து எனும் பாடலைப் பாடியுள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்துக்கும் வருகை தந்தை எல் ஆர் ஈஸ்வரி படக்குழுவினருடன் இணைந்து கலகலப்பாக நடனம் ஆடும் வீடியோவை ஆர் ஜே பாலாஜி வெளியிட்டுள்ளார். அதில் ’80 வயதில் இவரின் எனர்ஜியை பாருங்கள் ‘ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த பாடல் பற்றி பேசியுள்ள ஏ ஆர் ரஹ்மான், தனது டிவிட்டரில் ‘எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா மீண்டும் பாடுவது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. வணங்குகிறேன்’ எனக் கூறியிருந்தார். இதைப் பகிர்ந்த படத்தின் இயக்குனர்களில் ஒருவரான ஆர் ஜே பாலாஜி ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் ‘இட்லி கடை’ ஓடிடி ரிலீஸ்.. தேதி என்ன? எந்த ஓடிடி?

இந்திய மெகா சீரியலில் நடிக்கும் பில்கேட்ஸ்! உறுதிப்படுத்திய ஸ்மிருதி இரானி!

மனோரமா மகன், தேவா தம்பி.. ஒரே நாளில் தமிழ் திரையுலகில் 2 மரணங்கள்.. கண்ணீர் அஞ்சலி..!

பிரபல இசை நிறுவனத்தின் மேல் அதிருப்தியில் சந்தோஷ் நாராயணன்… என்ன காரணம்?

தெலுங்கில் நாளை ரிலீஸாகும் மாரி செல்வராஜின் ‘பைசன்’..!

அடுத்த கட்டுரையில்