Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல் படத்துக்கு இசையமைக்கும் ரஹ்மான்

கமல் படத்துக்கு இசையமைக்கும் ரஹ்மான்
, வெள்ளி, 27 நவம்பர் 2015 (15:29 IST)
கமலின் தெனாலி படத்துக்கு மட்டுமே இதுவரை இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். ரஹ்மானை கமல் தேடிப்போவதும் கிடையாது. இந்நிலையில் தனது பிரமாண்ட பட்ஜெட் படத்துக்கு ரஹ்மானை கமல் அணுகியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


 
 
அம்மா அப்பா விளையாட்டு என்ற நகைச்சுவைப் படத்தில் கமல் அடுத்து நடிக்கிறார். அதையடுத்து தலைவன் இருக்கின்றான் படம். தமிழ், இந்தியில் பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்தில் சைப் அலிகானும் நடிக்க உள்ளார்.
 
தமிழ், இந்தி இரு மொழி ரசிகர்களுக்கும் பரிட்சயமானவர் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் ரஹ்மானை கமல் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
 
எனினும் இந்தத் தகவலை கமல் தரப்பு இன்னும்  உறுதி செய்யவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil