Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சக நடிகர்கள் யாரும் யோசித்துக்கூட பார்க்காததை செய்த ராகவா லாரன்ஸ் !

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (15:29 IST)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 வீடுகளை கட்டி தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ் .
 
கஜா புயலால் பாதிக்கப்பட்டு தங்கள் வீடுகளை இழந்த மக்களுக்கு தன் சொந்த செலவில் 50 வீடுகளை கட்டி தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அதை பற்றி அவர் மேலும் பேசியதாவது, 
 
கஜா புயல் பாதித்த ஏழு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. எவ்வளவோ நல்ல உள்ளம் கொண்டவர்களும், அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 
கஜா புயல் நிவாரணமாக பலர் அவர்களுக்கு தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.
நாங்களும் அதையே செய்யாமல் கொஞ்சம் யோசித்து பார்த்தோம் அப்போது தான் வீடுகளை இழந்து தண்ணீரில் தத்தளிக்கும் குடும்பத்திற்கு 50 வீடுகளை கட்டி தர முயற்சி எடுத்து வருகிறோம்.
 
மேலும் இது போன்று இடிந்து முற்றிலும் பாதிக்கப் பட்ட 50 வீடுகளை கட்டித் தர உள்ளேன்.அப்படி பாதிக்கப் பட்டவர்களுக்கு எங்களது இந்த உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள். நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள்.
 
நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன்.ஒரு தனியார் தொலைகாட்சியும் இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.அன்பு பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.
 
உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும், இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments