Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ஆகும் ஆசை இல்லை… ராகவா லாரன்ஸ் கருத்து!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (07:07 IST)
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் யார் சூப்பர் ஸ்டார் என்பது குறித்து அதிகளவிலான சர்ச்சைகள் நடந்து வருகின்றன. ரஜினிதான் என்றென்றும் சூப்பர் ஸ்டார் என்றும், விஜய்தான் இப்போதைய சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டு வருகின்றனர்.

சமீபகாலமாக விஜய்யின் படங்கள் பெரியளவில் வசூல் செய்வதால் இந்த ஒப்பீடு தோன்றியுள்ளது. இதைப் பற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது சம்மந்தமாக ஜெயிலர் படத்தின் ஆடியோ விழாவில் பேசிய ரஜினிகாந்த் சொல்லிய கழுகு பருந்து கதையும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுபற்றி தற்போது பேசியுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ் “விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ஆகும் ஆசை இல்லை.  அவருக்கு அவராவே வரதான் ஆசை. நமக்கு நாமதான் போட்டின்னு மேடையில சொல்லிட்டு அவர் எப்படி மத்தவங்களப் பத்தி நெனைப்பாரு.” எனக் கூறியுள்ளார். ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

அமீர்கானின் ‘சித்தாரா ஜமீன் பார்’ படத்தின் தமிழ் டிரைலர் ரிலீஸ்!

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments