Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்களும் நடிப்போம் சரித்திர படம் - களம் இறங்கும் ராகவா லாரன்ஸ்

Webdunia
வியாழன், 25 மே 2017 (11:40 IST)
நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு பிரமாண்டமான சரித்திர படத்தில் நடிக்க இருக்கிறார்.


 

 
பாகுபலி2 படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின் இந்திய திரையுலகம், சரித்திர மற்றும் புராண கதையம்சம் கொண்ட படங்களின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளது.
 
இராமாயணம் ரூ.500 கோடி செலவிலும், மகாபாரதம் ரூ.1000 கோடி செலவிலும் சினிமாவாக தயாராக உள்ளது. இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ஒரு சரித்திர படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராக உள்ளது. 
 
18 மற்றும் 19ம் நூற்றாண்டின் பின்னணியில் உருவாக உள்ள இப்படத்தை, இயக்குனர் ராஜமௌலியிடம் உதவியாளராக பணிபுரிந்த மகாதேவ் என்பவர் இயக்குகிறார். முக்கியமாக, இப்படத்திற்கு பாகுபலி படத்தின் கதை, திரைக்கதையை உருவாக்கியவரும், ராஜமௌலியின் தந்தையுமான விஜேயேந்திர பிரசாத் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார்.
 
இப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments