Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது மார்பகங்கள் சிறியவை என சொல்லி உருவகேலி செய்தார்கள்… நடிகை ராதிகா ஆப்தே ஆதங்கம்!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (08:36 IST)
இந்தி சினிமாவில் ஆஹா லைஃப், சாமந்த், ரத்த சரித்ரா, ரத்த சரித்ரா 2 , தோனி, அந்தாதூன், உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இவர், தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஏராளமான வெப் சீரிஸ்களில் நடித்துள்ள இவர், இப்போது இந்திய அளவிலும் உலகளவிலும் பிரபலமான நடிகையாக உள்ளார்.

ராதிகா, தமிழ்சினிமாவில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து கபாலி படத்திலும், கார்த்தியுடன் இணைந்து ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலும், சித்திரம் பேசுதடி, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களில்  நடித்திருந்தார்.

இந்நிலையில் பாலிவுட்டில் வாய்ப்புகளை இழப்பது பற்றி பேசியுள்ள அவர் “என் உடல் எடை கொஞ்சம் கூடியதால் நான் வாய்ப்புகளை இழந்தேன். என்னுடைய பாலிவுட் சினிமா  வாழ்க்கையின் தொடக்க காலத்தில் எனது மூக்கு சரியாக இல்லை என்றார்கள். என்னுடைய மார்பகங்கள் பெரிதாக இல்லை என சொல்லி விமர்சித்தார்கள். இதுபோல பெண்களைப் பற்றி உருவகேலி செய்வதை சிலர் அவர்களின் உரிமை என்றே கருதுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பச்சை நிற உடையில் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

துருவ் விக்ரம்மை ரொமாண்டிக் ஹீரோவாக மாற்றப் போகும் சுதா கொங்கரா!

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் ஆகிறாரா விலங்கு வெப் சீரிஸ் புகழ் பிரசாந்த் பாண்டியராஜ்?

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments