Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி படத்தில் வித்தியாசமான, வலுவான கதாபாத்திரம் - ராதிகா ஆப்தே

ரஜினி படத்தில் வித்தியாசமான, வலுவான கதாபாத்திரம் - ராதிகா ஆப்தே
, செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (09:02 IST)
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் ராதிகா ஆப்தே நடிக்கயிருப்பதை அவரே உறுதி செய்துள்ளார்.
ரஞ்சித்தின் படம் இந்த மாதம் ஆரம்பிக்கிறது. ரஜினி தவிர்த்து பிரகாஷ்ராஜ், கலையரசன், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். நடிகர்களுக்கு நடிப்புப் பயிற்சி பட்டறையும் நடத்தப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
 
இந்தப் படத்தில் ராதிகா ஆப்தே நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் ராதிகா ஆப்தேயே இந்த செய்தியை உறுதி செய்துள்ளார்.
 
ரஜினிகாந்தைவிட பெரிய ஸ்டார் யாருமில்லை. அவரை சந்திக்க மிக ஆர்வமாக இருக்கிறேன். எனக்கு படத்தில் வித்தியாசமான, வலுவான நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதாபாத்திரம் என அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil