Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படத்தின் செட்டை மருத்துவமனைக்கு நன்கொடையாக கொடுத்த பிரபாஸ் படக்குழு!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (08:47 IST)
பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராதே ஷ்யாம்.

சாஹோ படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் ராதே ஷ்யாம்.. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ராதா கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த பிரம்மாண்டமான படத்துக்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க காதல் படம் என சொல்லப்பட்டது. ஆனாலும் பிரபாஸின் சம்பளம் எல்லாம் சேர்த்து மொத்தமாக 200 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்காக போடப்பட்ட மருத்துவமனை செட் ஒன்றின் பெரும்பாலான பகுதிகளை நன்கொடையாக ஒரு மருத்துவமனைகுப் படக்குழுவினர் அளித்துள்ளனர். அதன்படி 50 படுக்கைகள், ஸ்ட்ரெச்சர்கள், பிபிஇ கிட் உடைகள் ஆகியவற்றை கொடுத்துள்ளதாக படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனரை வளைக்க முயற்சிக்கும் சிம்பு, தனுஷ், எஸ்கே.. பட்டியலில் இணைந்த தெலுங்கு நடிகர்..!

அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments