Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலுக்கு வர ரகசியமாக திட்டமிடும் விஜய்: ஆச்சரிய தகவல்

Webdunia
சனி, 8 செப்டம்பர் 2018 (17:41 IST)
நடிகர் விஜய் அரசியலுக்கு வர ரகசியமாக திட்டமிட்டுள்ளதாக ராதாரவி கூறியுள்ளார்.



முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கருணாநிதி மறைவிற்குப் பின் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வைத்தியத்தை பயன்படுத்தி அரசியலில் களம் காண ரஜினிகாந்த், கமல்ஹாசன் ,விஷால், உள்ளிட்டோர் தீவிரமாக உள்ளனர். இதை பயன்படுத்தி தமிழகத்தில் கால் பதிக்கவும் பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.

இதனிடையே நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வருவதற்கு ஆயத்தமாகி வருகிறார். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய் சர்க்கார் படத்தில் நடித்து வருகிறார் .இந்த படத்தில் ராதாரவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இது அரசியல் படமாக கருதப்படுகிறது. இந்த படம் குறித்து ராதாரவி பேசுகையில், விஜய்யின் அரசியல் பயணம் குறித்தும் பேசினார்.



"விஜய் அரசியலுக்குள் நுழைய ரகசியமாக திட்டமிடுவது நன்றாக தெரிகிறது. அரசியல் வாழ்க்கையில் அனைத்தையும் எப்படி கையாள்வது, ஒரு தலைவனாக மக்களை எப்படி வழிநடத்துவது போன்றவற்றை சர்கார் நாயகன் மெதுவாக கற்று வருகிறார்" என்று கூறியுள்ளார்.

ராதாரவியின் இக்கருத்து விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments