Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவை பார்த்தால் கூப்பிடுபவர் போல் இருக்கின்றதா? பொங்கி எழுந்த ரசிகர்கள்

Webdunia
ஞாயிறு, 24 மார்ச் 2019 (10:03 IST)
நடிகர் ராதாரவி பொதுமேடைகளிலும் சினிமா விழாக்களிலும் பேசும்போது பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 'கொலையுதிர்க்காலம்' திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் விழாவில் நயன்தாரா குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது: அவர் பேசியதாவது:
 
"நயன்தாரா நல்ல ஒரு நடிகை அதில் சந்தேகமே இல்லை. அவர் இத்தனை நாள் தம் கட்டி நடிப்பதே பெரிய விஷயம். அவங்களை பற்றி வராத செய்தியே இல்லை. அதையும் தாண்டி நிக்கிறாங்க. தமிழ்நாட்டு மக்கள் எல்லாத்தையும் 4 நாளுக்கு தான் ஞாபகம் வெச்சுப்பாங்க. அப்புறம் மறந்துருவாங்க. ஒருபக்கம் நயன்தாரா பேயாகவும் நடிக்கிறாங்க, இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறாங்க. முன்பெல்லாம் கடவுளாக நடிக்க கே.ஆர்.விஜயாவைத்தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேணும்னாலும் நடிக்கலாம். பார்த்தவுடனே கும்பிடறவங்களையும், பார்த்தவுடனே கூப்பிடுறவங்களையும் கடவுள் வேடத்தில் நடிக்க வைக்குறாங்க' என ராதாரவி பேசினார்.
 
ராதாரவின் இந்த பேச்சுக்கு நயன்தாரா ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நயன்தாராவை பார்த்தால் கூப்பிடுபவர் போல் இருக்கின்றதா? விக்னேஷ் சிவன் இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும்., நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ராதாரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இதே கருத்தை பாடகி சின்மயி தனது டுவிட்டரில் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தான் நடித்த கேரக்டரின் பெயரை நிஜ பெயராக மாற்றி கொண்டா நடிகர் சாம்ஸ்.. குவியும் வாழ்த்துக்கள்..!

ஸ்டைலிஷான உடையில் அசத்தல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கார்ஜியஸ் கேர்ள் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் க்ளிக்ஸ்!

ரிலீஸ் தேதியை உறுதி செய்த பாலகிருஷ்ணாவின் ‘அகாண்டா 2’ படக்குழு!

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா… இரண்டாம் பாகத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments