Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது முறையாக… ஐபிஎல் போட்டியில் வெளியாகும் RJ பாலாஜி படத்தின் டிரைலர்… வெளியான தகவல்!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (14:35 IST)
சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனத்தைப் பெற்ற திரைப்படம் பதாய் ஹோ. வீட்டில் கல்யாண வயதில் மகளும் மகனும் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்துக்கு பாக்யராஜ் படத்தின் தலைப்பான வீட்ல விஷேசங்க என்ற தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது. வீட்ல விஷேசம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜுன் 17 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரைலர் நாளை நடக்கும் ஐபிஎல் போட்டியின் போது வெளியிடப்படும் என R J பாலாஜி அறிவித்துள்ளார். முன்னதாக அவர் நடித்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களின் டிரைலரும் ஐபிஎல் போட்டியின் போதுதான் ரிலீஸ் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments