Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘ஹேப்பி எண்டிங்’ படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

vinoth
வெள்ளி, 1 நவம்பர் 2024 (15:40 IST)
பண்பலை தொகுப்பாளராக இருந்த ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமாக்களைக் கண்டபடி வறுத்தெடுத்து விமர்சனம் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பிறகு அவருக்கு ‘தீயா வேல செய்யணும் குமாரு’ படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிறகு அவர் நடித்த நானும் ரௌடிதான் படம் அவரைப் பிரபல நடிகராக்கியது.

அதன் பின்னர் எல் கே ஜி படத்தில் கதாநாயகனாக நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர் இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். அப்படி ஆர் ஜே பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் இணை இயக்குனர் சித்தார்த் என்பவர் இயக்குகிறார். 

அதே போல ஆர் ஜே பாலாஜி குட்னைட் மற்றும் லவ்வர் ஆகிய படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஹேப்பி எண்டிங்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தலைமறைவான நடிகர் கிருஷ்ணா.. ஒரே நாளில் தனிப்படையிடம் சிக்கி கைது.. தீவிர விசாரணை..!

ஹாலிவுட் படத்தில் நடிகை வரலட்சுமி.. சவுதி அரேபியாவில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை..!

நீ என் படத்தில் நடி.. நான் உன் படத்துல நடிக்கிறேன்.. கார்த்தி - நானி இடையே நட்பு ஒப்பந்தம்?

சினிமாவில் அறிமுகமாகும் தேவயானி மகள்.. தியாகராஜன் - பிரசாந்த் கொடுக்கும் வாய்ப்பு..!

அஜித்தை சந்திக்க துபாய் செல்கிறாரா தனுஷ்? கதை ஓகே ஆனால் எப்போது படப்பிடிப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments