Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் படத்துடன் மோதும் பிக்பாஸ் பிரபலங்களின் படங்கள்

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (18:24 IST)
கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம் 2' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதே தேதியில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' திரைப்படம் அதன்பின்னர் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகிய ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த 'பியார் பிரேமா காதல்' என்ற படம், கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' படத்திற்கு போட்டியாக அதே ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சற்றுமுன்னர் இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்தது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ள நிலையில் தற்போது இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்பதை உறுதி செய்துள்ளனர்
 
இயக்குனர் இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா, ரேகா, ஆனந்த்பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்தது மட்டுமின்றி தயாரிக்கவும் செய்துள்ளார் யுவன்ஷங்கர் ராஜா

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிலில் வைத்துத் திரைக்கதையை ஆசி பெற்ற சூர்யா 46 படக்குழுவினர்… தொடர் தோல்விதான் காரணமா?

திரையில் மகள் பெயரைப் பார்த்து நெகிழ்ந்த குஷ்பு… மணிரத்னத்துக்கு நன்றி!

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!

வாடிவாசல் படத்தை கிடப்பில் போட சூர்யாதான் காரணமா?

கமல்ஹாசனை இயக்க ஆசை… ஆனால் நடக்குமா?- இயக்குனர் அமீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments