Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்லு அர்ஜூன் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியான 'புஷ்பா2: தி ரூல்’ டீசர்!

J.Durai
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (08:50 IST)
பிரம்மாண்டம், வண்ணங்கள் மற்றும் மிகப்பெரிய பொருட்ச் செலவில் உருவாகியுள்ள"புஷ்பா2: தி ரூல்" படத்தின் காட்சிகள் அனைத்தும் டீசரில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
 
டீசரில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருக் காட்சியிலும் புஷ்பா ராஜ் சக்தி வாய்ந்த அவதாரத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் தீவிரத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார். 
 
இதற்கு இன்னும் வலுசேர்க்கும் விதமாக தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. 
 
படத்தின் டீசரில் ஜாதரா காட்சி இடம்பெற்றுள்ளது. சம்மக்கா சாரலம்மா ஜாதரா என்றும் அழைக்கப்படும் ஜாதரா, இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் கொண்டாடப்படும் இந்து பழங்குடியின தெய்வங்களை கௌரவிக்கும் ஒரு திருவிழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் இந்த 4 நாட்கள் திருவிழாவிற்கு வருகை தருகின்றனர்.
 
மேஸ்ட்ரோ இயக்குநர் சுகுமார் இந்த ஜாதராவை படத்தில்  உருவாக்கியுள்ளார். இதன் பிரம்மாண்டம் மற்றும் நுணுக்கமான காட்சியின் ஒரு கிளிம்ப்ஸ் மட்டுமே டீசரில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் அழகு, அதன் வண்ணங்கள், பாரம்பரியம் என அனைத்தையும் இயக்குநர் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். 
 
2021 பிளாக்பஸ்டர் 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தொடர்ச்சி இன்னும் பெரிதாகவும், இதுவரை பார்த்திராத அனுபவமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக கடின உழைப்பைப் படக்குழு கொடுத்துள்ளது.
 
‘புஷ்பா2:  தி ரூல்’ ஆகஸ்ட் 15, 2024 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
 
இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments