புஷ்பா வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு தொடக்கம்?

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (09:57 IST)
அல்லு அர்ஜுன் ராஷ்மிகா நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

டிசம்பர் 17 ஆம் தேதி வெளியான புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனாலும் வசூலில் சோடை போகவில்லை. இதுவரை 300 கோடிக்கும் மேலாக திரையரங்கு மூலமாகவே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தென்னிந்தியா மட்டும் இல்லாமல் வட இந்தியாவிலும் இந்த படம் வட இந்திய நடிகர்களின் படத்துக்கு இணையாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து புஷ்பா படத்தின் 2 ஆம் பாகம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாம் படக்குழு. இந்த ஆண்டு இறுதியில் புஷ்பா 2 ரிலிஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி நடிக்கும் புதிய படம்!.. கமல் கொடுத்த அப்டேட்!.. வைரல் போட்டோ!...

அரசன்’ படம் எப்படி வரப்போகுது தெரியுமா? புது அப்டேட் கொடுத்த கவின்

திரை தீப்பிடிக்கப் போகுது… ஜனநாயகன் படத்தில் காத்திருக்கும் ஆக்‌ஷன் விருந்து!

விஜய் சேதுபதி படம் தாமதம்… ஹரிஷ் கல்யாணை இயக்கும் பாண்டிராஜ்!

150 கோடி ரூபாய் மைல்கல் வசூலைத் தொட்ட ராஷ்மிகாவின் ‘தாமா’!

அடுத்த கட்டுரையில்
Show comments