Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லைஃப்டைம் கலெக்‌ஷனில் பாகுபலியை முந்திய புஷ்பா 2… அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

vinoth
புதன், 19 பிப்ரவரி 2025 (08:11 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரிக் குவித்தது. இப்போது வரை கணிசமான திரையரங்குகளில் இந்த படம் ஓடி வருகிறது. படம் இதுவரை 1900 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து படத்தின் ரீ லோடட் வெர்ஷன் (சுமார் 3 மணிநேரம் 43 நிமிடம்) திரையரங்குகளில் வெளியானது.

இதன் மூலம் இந்திய சினிமாக்களில் அமீர்கானின் ‘டங்கல்’ திரைப்படத்துக்குப் பிறகு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை ‘புஷ்பா 2’ படைத்துள்ளது. இதையடுத்து இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகி அதிலும் கவனம் பெற்றது.

இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகள் மூலமாக மட்டும் 1871 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்.  இது பாகுபலி 2 படத்தின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பாகுபலி 2, 1788 கோடி ரூபாய் வசூலித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல்.. வசூலில் கலக்கும் தனுஷின் ‘குபேரா’!

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படத்துக்கு R சான்றிதழ்தான் கிடைக்குமா?... ரசிகர்கள் அதிர்ச்சி

தக் லைஃப் படத்துக்கு மல்ட்டிப்ளக்ஸ் சங்கத்தினர் அபராதம்… பின்னணி என்ன?

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.. மருத்துவமனையில் இருந்து நடிகர் பொன்னம்பலம் உருக்கம்..!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments