Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புலி முருகனில் மோகன்லாலுடன் நடிக்கும் நமிதா

புலி முருகனில் மோகன்லாலுடன் நடிக்கும் நமிதா
, செவ்வாய், 15 செப்டம்பர் 2015 (14:36 IST)
மலையாளத்தில் மோகன்லால் நடித்துவரும் புலி முருகன் படத்தில் நிமிதா ஒப்பந்தமாகியுள்ளார்.


 

 
கடந்தசில வருடங்களாக நமிதாவை திரையுலகம் ஒதுக்கி வைத்திருந்தது. உடல் பீப்பாயாக மாறி 70 எம்எம்மில் இருந்த அவரை எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பது? என்னுடைய நெருங்கிய நண்பர்களே அப்போது என்னை கைவிட்டார்கள் என உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டால் மெலிந்த தோற்றத்துக்கு மாறியிருக்கும் நமிதா தனது கடந்த கால கஷ்டத்தை நினைவுகூர்கிறார்.
 
உடல் உடை குறைந்ததும் தானாகவே நமிதாவை தேடி வாய்ப்புகள் வருகின்றன. மலையாளத்தில் மோகன்லாலுடன் அவரது புலி முருகன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது நமிதாவுக்கு.
 
தற்போது அப்படத்தில் நடித்து வருகிறார். அவர் விரும்பும் அதிரடி வேடமாம் இதில்.
 
சும்மா புகுந்து கலக்குங்க.

Share this Story:

Follow Webdunia tamil