புலிக்குத்தி பாண்டிக்கு சன் தொலைக்காட்சியில் கிடைத்த வரவேற்பு –சூர்யா படத்தை முந்திய டி ஆர்பி!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (09:39 IST)
விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் நடித்த புலிக்குத்தி பாண்டி திரைப்படம் திரையரங்குகளில் நேரடியாக வெளியாகாமல் சன் தொலைக்காட்சியில் பொங்கல் விடுமுறைக்கு வெளியானது.

சசிக்குமார் நடித்த குட்டிப் புலி மற்றும்  கார்த்தி நடித்த கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் கௌதம் கார்த்தியை வைத்து இயக்கிய தேவராட்டம் திரைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில் அவர்  இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் திரையரங்க வெளியீடாக இல்லாமல் சன் நெக்ஸ்ட் தளம் மற்றும் சன் டிவியில் நேரடியாக பொங்கல் பண்டிகைக்கு வெளியிட்டது. திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானதால் அதிகளவில் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டது. இந்நிலையில் அதே சன் தொலைக்காட்சியில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தைவிட அதிக டி ஆர் பி ரேட்டிங்கை பெற்றுள்ளது. இது புலிக்குத்தி பாண்டி படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments