Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் பாடல்கள் வெளியீடு - புலியை விடாத பாயும் புலி

ஒரே நாளில் பாடல்கள் வெளியீடு - புலியை விடாத பாயும் புலி
, சனி, 4 ஜூலை 2015 (11:33 IST)
படத்தை தொடங்கும் நாளில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பது ஏவிஎம் ஸ்டுடியோவின் வழக்கம். கடைசியாக அவர்கள் தயாரித்த படங்களுக்கு அவ்வாறு வெளியீட்டு தேதியை தீர்மானிக்க முடியவில்லை. திரைத்துறை இருக்கும் நிலைமை அப்படி.
 

 
ஆனால், படத்தை தொடங்கும் நாளில் பட வெளியீட்டை அறிவிப்பதை வழக்கமாக்கி வருகிறார் விஷால். அவரது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்த பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் படங்கள் தொடங்கப்பட்ட அன்றே ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டன, அதே தேதியில் படமும் வெளியானது. 
 
சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள பாயும் புலி, விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். அன்றுதான் விஜய்யின் புலி படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
 
புலியின் பாடல்களை ஆகஸ்ட் 2 வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. அதேநாளில் பாயும் புலியின் பாடல்களை வெளியிட விஷால் முடிவு செய்துள்ளார். முன்னதாக இந்த மாதம் 15 -ஆம் தேதி ஒரேயொரு பாடலை மட்டும் விளம்பரத்துக்காக வெளியிடுகின்றனர்.
 
புலியை பாயும் புலி விடாது போலிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil