Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இணையத்தில் வெளியான தொடரி, ஆண்டவன் கட்டளை

இணையத்தில் வெளியான தொடரி, ஆண்டவன் கட்டளை

இணையத்தில் வெளியான தொடரி, ஆண்டவன் கட்டளை
, திங்கள், 26 செப்டம்பர் 2016 (17:36 IST)
தொடரி, ஆண்டவன் கட்டளை படங்கள் திரையரங்கில் வெளியானதும் இணையத்தில் வெளியாகி சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் வயிற்றில் புளி கரைத்துள்ளது.

 
 
திருட்டு டிவிடி நடமாட்டம் தற்போது ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கும் நிலையில், இணையத்தில் படங்கள் வெளியாவது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 
 
தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து திரைக்கு வந்துள்ள தொடரி, ஆண்டவன் கட்டளை படங்களும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளி வந்துள்ளன. தொடரி கடந்த வியாழக்கிழமையும் ஆண்டவன் கட்டளை வெள்ளிக்கிழமையும் திரைக்கு வந்தன. இதனால் இரண்டு படக்குழுவினரும் அதிர்ச்சியில் உள்ளனர். இணையதளங்களில் வந்ததால் இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
 
நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் டுவிட்டரில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை தடுப்பதற்கு களத்தில் இறங்கும்படி தனுசுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார். இதுபோன்ற குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் விஷால் முன்னிலையில் இருப்பதாக நடிகை குஷ்பு டுவிட்டரில் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
 
புதிய படங்கள் உடனுக்குடன் தொடர்ந்து இணையதளங்களில் வெளிவருவதால் அடுத்தடுத்து படங்களை திரைக்கு கொண்டு வர உள்ள தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என்று தவிப்பில் இருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜீ.வி.பிரகாஷ் படத்தில் வடிவேலு...?