Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏய் கடவுளே...."சைக்கோ" படத்தின் உருக்கமான காட்சி இதோ!

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (18:55 IST)
சைக்கோ படத்தில் இடம்பெற்றுள்ள உருக்கமான காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளனர். 
 
கண்ணே கலைமானே படத்தை அடுத்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் மிஸ்கின் இயக்கத்தில் "சைக்கோ" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்ய மேனன் நடித்துள்ளார். மேலும்,  நடிகை அதிதி ராவ் ஹைதாரி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
க்ரைம் திரில் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் "உன்ன நெனச்சு"  ‘நீங்க முடியுமா" என்ற இரண்டு பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதுடன் டீசர் , ட்ரைலர் அடுத்தடுத்து வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றிருந்தது. வருகிற ஜனவரி 24-ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்திற்கு மிகுந்த ஆவலில் உள்ள ரசிகர்கள் ஆவலில் உள்ளனர். 
 
ரசிகர்களின் ஆவலை இன்னும் தூண்டும் வகையில் சற்றுமுன் இப்படத்தின் உருக்கமான மர்டர் காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த வீடியோவின் டாப் ஆங்கில் காட்சி ரசிகர்களின் அப்ளாஸ் அள்ளி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments