Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கெத்தா தொடங்குவோம் – சிம்புவைக் கிண்டல் செய்தவர்களுக்கு சுரேஷ் காமாட்சி பதில் !

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (15:19 IST)
சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதை கேலி செய்யும் விதமாக பகிரப்பட்ட மீம்ஸ்களுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலளித்துள்ளார்.

நடிகர் சிம்புவுக்கு தற்போது தமிழக அளவில் பல ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும், கடந்த காலங்களில் அவரால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவரை வைத்து படம் இயக்குவதை தவிர்த்து வந்தனர். படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவது, சில சமயங்களில் வராமலே இருப்பது, படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த சொல்வது என தொடர்ந்து இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது. இதனால் சமூகவலைதளங்களில் அவரை கேலி செய்பவர்களும் அதிகமாக உள்ளனர்.

இந்நிலையில் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் தொடங்கிய மாநாடு திரைப்படம் கொரோனா பீதியால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்புவை மையப்படுத்தி கேலிகளும் மீம்ஸ்களும் உருவாக்கப்பட்டன. அவற்றுக்குப் பதிலளிக்கும் விதமாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரோனாவுக்கா இடம் கொடுப்போம்? இந்த Back up இல் ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் STR தான். மீண்டும் கெத்தா தொடங்கும் எங்கள் ‘மாநாடு’’ எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments