Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ரொமோஷனுக்கு வரலைனா சம்பளம் கிடையாது! – த்ரிஷாவுக்கு எச்சரிக்கை!

Webdunia
சனி, 22 பிப்ரவரி 2020 (16:46 IST)
பட ப்ரோமாஷன் விழாக்களில் கலந்து கொள்ளாவிட்டால் நடிகை திரிஷாவின் சம்பளத்தில் ஒரு பகுதி பிடித்தம் செய்துக் கொள்ளப்படும் என தயாரிப்பாளர் சிவா எச்சரித்துள்ளார்.

த்ரிஷா நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் “பரமபத விளையாட்டு”. இதில் த்ரிஷா மருத்துவராக நடித்துள்ளார். பெண் மையப்படுத்திய சினிமாவான இதை திருஞானம் இயக்கியுள்ளார். இந்த படம் த்ரிஷாவுக்கு 60வது படம் ஆகும்.

இந்த படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்ட நிலையில் த்ரிஷா மட்டும் வரவில்லை.

நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் சிவா “பெரிய ஹீரோக்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் ப்ரோமோஷன்களுக்கு நடிகைகள் தேவையில்லை. அந்த ஹீரோவை வைத்தே ப்ரொமோட் செய்து கொள்ளலாம். ஆனால் சின்ன பட்ஜெட் படங்கள், முக்கியமாக ஹீரோயினை மையப்படுத்திய படங்கள் எனும்போது அவர்கள் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். இந்த நிகழ்வில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை. ஆனால் இனிவரும் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என்றால் அவரின் சம்பளத்தின் ஒரு பகுதியை பிடித்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி முடிவெடுப்போம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments