Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: டி.ஆர். பின்னடைவு

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (09:51 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. முதல்கட்ட தகவலின்படி தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி ராஜேந்தர் பின்னடைவில் இருப்பதாகவும் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி முன்னிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் தேனப்பன் ஆகிய மூன்று பேர் போட்டியிட்டனர். இவர்களில் டி ராஜேந்தர் மற்றும் முரளி ஆகிய இருவரும் வெவ்வேறு அணியில் போட்டியிட்டனர் என்பதும் தேனப்பன் எந்த அணியிலும் சேராமல் தனியாக களம் கண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று மொத்தம் உள்ள 1303 வாக்குகளில் 1050 பேர்கள் மட்டும் வாக்களித்தனர் என்பதும் ரஜினிகாந்த் தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாக்களிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. முதல்கட்ட தகவலின்படி தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி ராஜேந்தர் பின்னடைவில் இருப்பதாகவும் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி முன்னிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன
 
இன்னும் ஒரு சில மணி நேரங்களில் முழுமையாக வாக்கு எண்ணிக்கை முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் அதிகாரபூர்வமாக வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தலை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments