Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதி மற்றும் இடம் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (05:17 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் தேதி, தேர்தல் நடைபெறும் இடம், முடிவு வெளியாகும் நேரம் குறித்த அறிவிப்பை தேர்தல் பார்வையாளர் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் அவர்கள் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.




இதன்படி ஏப்ரல் 2-ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறும். என்றும், இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறித்து ஏதேனும் புகார் கொடுக்க விரும்புபவர்கள் வரும் 27ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்று அறிவித்தார். கொடுக்கப்படும் புகார்கள் 28ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும்.

மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் 01.03.2017 என்றும், தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 2ஆம் தேதி.அன்று இரவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்தார்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான ஒரு அணி, ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணி, எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் ஒரு அணி என இப்போதைக்கு மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலுக்கு விஷால் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments