Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதங்களில் 450 கோடி முதலீடு.. யார் இந்த புதிய தயாரிப்பாளர்.. ஆகாஷ் பாஸ்கரன் குறித்த பரபரப்பு தகவல்..!

Mahendran
புதன், 21 மே 2025 (16:41 IST)
காலங்காலமாக திரைப்படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களே, ஒரே நேரத்தில் ஒரு படம் தான் தயாரித்து வருவார்கள். அதிகபட்சம் இரண்டு படங்கள் வேண்டுமானால் தயாரிக்கலாம். ஆனால், புதிதாக வந்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திடீரென ஒரே நேரத்தில் பல படங்களை தயாரித்து, 450 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சிவகார்த்திகேயன் நடிக்கும் "பராசக்தி" என்ற படத்தை தயாரிக்கும் ஆகாஷ் பாஸ்கரன், இந்த படத்திற்காக 250 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல், சிம்புவின் 49வது படத்தையும் தயாரிப்பது ஆகாஷ் பாஸ்கரன்தான். காயடு லோஹர், சந்தானம் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் பட்ஜெட் 200 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
மேலும், தனுஷ் நடித்த "இட்லி கடை  படத்தையும் இவர்தான் தயாரித்திருக்கிறார் என்பதும், இந்த படத்தின் தயாரிப்பும் கிட்டத்தட்ட 100 கோடியை நெருங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷுக்கு 40 கோடி, சிவகார்த்திகேயனுக்கு 25 கோடி, சிம்புவுக்கு 15 கோடி என அட்வான்ஸ் மட்டுமே கொடுத்திருக்கும் ஆகாஷ் பாஸ்கரன், பணத்தை தண்ணீராக செலவு செய்து கொண்டிருக்கும் நிலையில் தான் திடீரென அமலாக்கத்துறை சோதனையில் சிக்கி உள்ளார்.
 
 திமுகவில் உள்ள முக்கிய நபர்களுக்கு நெருக்கமாக இருப்பதாக சொல்லப்படும் ஆகாஷ் பாஸ்கரன், ஆறே மாதத்தில் தமிழ் சினிமாவில் 450 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். இந்த பணம் உண்மையிலேயே யாருக்கு சொந்தம் என்ற தகவல், அமலாக்கத்துறை விசாரணையின் முடிவில் தான் தெரிய வரும் என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments