ப்ரியாமணியின் திருமண நிச்சயதார்த்தம்
ப்ரியாமணியின் திருமண நிச்சயதார்த்தம்
நடிகை ப்ரியாமணியின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் நடந்தது.
ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியின் போது, ப்ரியாமணிக்கு முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபருடன் நட்பு ஏற்பட்டது. அது பின் காதலானது. இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த வெள்ளிக்கிழமை - மே 27 ப்ரியாமணியின் வீட்டில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள்,
நண்பர்கள் மட்டுமே இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
சமூகவலைத்தளத்தில் ப்ரியாமணி இது குறித்து தெரிவித்த பிறகே அவரது திருமண நிச்சயதார்த்தம் குறித்து வெளி உலகுக்கு தெரிய வந்தது.
விரைவில் இவர்களின் திருமணம் நடக்க உள்ளது.