Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால்

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2015 (15:07 IST)
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அதிக படங்களில் நாயகனாக நடித்தவர், மோகன்லால். மோகன்லால் யாருடைய இயக்கத்தில் அதிகம் நடித்திருக்கிறார் என்று பார்த்தால், அதுவும் ப்ரியதர்ஷன்தான். அந்தளவு இருவரும் இணைபிரியாத நண்பர்கள்.
 
ப்ரியதர்ஷன் கடைசியா மலையாளத்திலும், இந்தியிலும் இயக்கிய படங்கள் சரியாகப் போகவில்லை. மலையாளத்தில் அவரது கடைசிப் படம், ஆமையும் முயலும், ஐரிஷ் படத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படம், அட்டர் ப்ளாப். அதற்கு முன்பு மோகன்லாலை வைத்து இயக்கிய கீதாஞ்சலியும் தோல்விப் படம்தான்.
 
இந்நிலையில் தனது முன்னாள் சிஷ்யர் ஏ.எல்.விஜய் தயாரிப்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு படம் ஒன்றை தமிழில் இயக்குகிறார். அத்துடன் மலையாளத்தில் மோகன்லாலை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். இந்தப் படத்துக்கு, அம்மு டூ அம்மு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்தப் படமாவது வெற்றியாக அமையுமா என்பதே அனைவரின் கேள்வி.

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

Show comments