Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதித்ய வர்மா: ரைசா கேரக்டரில் ப்ரியா ஆனந்த்?

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (21:25 IST)
நடிகர் விக்ரம் மகன் அறிமுகமான 'வர்மா' படத்தை இயக்குனர் பாலா இயக்கிய நிலையில் இந்த படம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் இந்த படத்தை வெளியிடவில்லை என்று தயாரிப்பி நிறுவனம் அதிரடியாக அறிவித்தது. 
 
மேலும், அதற்கு பதிலாக மீண்டும் புதிய இயக்குனரின் இயக்கத்தில் இந்த படத்தை உருவாக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிவித்திருந்தது.
 
இந்நிலையில் இந்த படத்தை 'அர்ஜூன் ரெட்டி' படத்தில் உதவி இயக்குனரான கிரிசாயா இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது 'ஆதித்ய வர்மா' என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
விக்ரம் மகன் துருவ் ஜோடியாக பனிதா சந்தூ நடிக்கும் இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ராதான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பது அனைத்தும் ஏற்கனவே தெரிந்த விஷயமே. 
 
தற்போது புது அப்டேட் என்னெவெனில் இந்த படத்தில் நடிகை ப்ரியா ஆனந்த் கமிட் ஆகியுள்ளார். வர்மா படத்தில் ரைசா கேரக்டருக்கு பதில் ப்ரியா ஆனந்த் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படத்தின் தயாரிப்பாளர் இவரா?.. வெளியான தகவல்!

ஹீரோவாக நடிக்கும் படத்துக்காக மார்ஷல் ஆர்ட்ஸ் கற்றுக்கொள்ளும் லோகேஷ் கனகராஜ்!

என் மகன் சீக்கிரமே இயக்குனர்… எனக்கும் ஒரு வாய்ப்புண்டு – பார்த்திபன் மகிழ்ச்சி!

கூலி படத்தில் அமீர்கான் வரும் காட்சிகள் எத்தனை நிமிடம்?... அவரே வெளியிட்ட தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments