Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சலார் திரைப்படம் கேம் ஆஃப் த்ரோன்ஸ் போல இருக்கும்… நடிகர் பிரித்விராஜ் தகவல்!

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (09:48 IST)
பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

டிசம்பர் 22 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸானது. 5 மொழிகளில் வெளியான இந்த டிரைலர் மொத்தம் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

இரண்டு நண்பர்கள் எப்படி எதிரிக்ள் ஆனார்கள் என்பதை சொல்லும் கதைக்களமாக முதல் பாகம் இருக்கும் என இயக்குனர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் வரதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிருத்விராஜ் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளிலும் அவரது கதாபாத்திரத்துக்கு அவரே டப்பிங் பேசியுள்ளார்.

மேலும் சலார் படம் பற்றி பேசியுள்ள பிருத்விராஜ் “சலார் திரைப்படம் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர் போல மிகவும் ஆழமாக இருக்கும். ஆழமான கதைக்களம் மற்றும அழுத்தமானக் கதைமாந்தர்களை சலார் கொண்டிருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments