Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்புரான் அந்த மாதிரி பிரம்மாண்ட பட்ஜெட் படம் இல்லை… இயக்குனர் பிரித்விராஜ்!

vinoth
சனி, 22 மார்ச் 2025 (16:30 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இதற்கிடையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை பிருத்விராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் கோவிட் உள்ளிட்ட காரணங்களால் எம்பூரான் திரைப்படத்தின் ஷூட்டிங் நீண்ட நாள் தாமதத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது. இதையடுத்து ‘எம்பூரான்’ திரைப்படம் மார்ச் மாதம் 28 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு ப்ரமோஷன் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் டிரைலர் வெளியாகி இந்திய அளவில் கவனம் செலுத்தியது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் பிரித்விராஜ் பேசும்போது “இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டையும் நாங்கள் மேக்கிங்குக்காக செலவிட்டுள்ளோம். இந்த படத்துக்காக மோகன்லால் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கிக் கொள்ளவில்லை. இது வழக்கமாக 80 சதவீதம் சம்பளத்துக்கும், 20 சதவீதம் மேக்கிங்குக்கும் செலவிட்ட படம் இல்லை. ” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் அப்டேட்…!

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளது- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்!

சிம்புவின் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்கள்… யார் யார் தெரியுமா?

ஷங்கர் மகனுக்கு கதாநாயகி ஆகும் மமிதா பைஜு..!

பராசக்தி படத்தின் ஷூட்டிங் இலங்கையில் நடத்தப்பட காரணம் இதுதானா?

அடுத்த கட்டுரையில்
Show comments