Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிருத்விராஜுடன் யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

vinoth
புதன், 17 ஜனவரி 2024 (08:07 IST)
மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர் பாசில் ஜோசப்.  அவர் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஜெய ஜெய ஜெய ஹே திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்து பாராட்டுகளையும் குவித்துள்ளது. இந்த படத்தை விபின் தாஸ் இயக்கி இருந்தார்.

ஓடிடியில் வெளியாகி தமிழ்நாட்டிலும் இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்போது விபின் தாஸ் இயக்கத்தில் அடுத்த படமாக உருவாகியுள்ள குருவாயூர் அம்பலநடையில் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் பிருத்விராஜ், யோகி பாபு மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் நடித்துள்ளனர். மற்ற முக்கிய வேடங்களில்  நிகிலா விமல், அனஸ்வர ராஜன், ஜெகதீஷ், ரேகா, சிஜு சன்னி, இர்ஷாத் ஆகியோர் நடித்துள்ளனர். அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.  இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்…!

கார்த்தி 29 படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... வெளியான தகவல்!

ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் அளவுக்கு ஓடிடி நிறுவனங்கள் வந்துவிட்டன – குபேரா தயாரிப்பாளர் புலம்பல்!

விஞ்ஞானத்தோடு வீம்பாக மோதுவது ஏன்? தனது ஆக்‌ஷன் காட்சிகள் குறித்து பாலையா ஓபன் டாக்!

விஜய்க்காக எழுதிய கதையில் தானே கதாநாயகனாக நடிக்கும் ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments