சமீபத்தில் வந்ததில் விடாமுயற்சி டிரைலர்தான் பெஸ்ட்… பாராட்டித் தள்ளிய பிரித்விராஜ்!

vinoth
திங்கள், 27 ஜனவரி 2025 (08:34 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இதற்கிடையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை பிருத்விராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் அதற்கு முன்பாக மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்ற படத்தை இயக்கினார். அதன் பின்னர் ஏற்கனவே பிருத்விராஜ் மற்றும் மோகன்லால் கூட்டணியில் அறிவிக்கப்பட்ட எம்புரான் திரைப்படம் உருவாகி மார்ச் 27 ஆம் தேதி ரிலீஸாகிறது. எம்புரான் படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸாகி பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளது.  படம் இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் மம்மூட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் போது பேசிய பிரித்விராஜ் “சமீபத்தில் வெளியான டிரைலர்களில்  விடாமுயற்சி படத்தின் டிரைலர்தான் சிறப்பாக இருந்தது” எனப் படக்குழுவினரைப் பாராட்டி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments