Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து வசூலில் முன்னேறும் பிரித்விராஜின் ஆடு ஜீவிதம்!

vinoth
புதன், 3 ஏப்ரல் 2024 (07:51 IST)
மலையாள இலக்கியத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த படைப்பு பென் யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’  நாவல். இந்த நாவல் தமிழுலும் மொழி பெயர்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் பிருத்விராஜ், அமலா பால் ஆகியோர் நடிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ப்ளஸ்ஸி இயக்கியுள்ளார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படம் மார்ச் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

கேரளாவில் இருந்து அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்லும் ஒரு இளைஞன் அங்கு ஆடு மேய்ப்பவராக பாலைவனத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் அவர்  வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே ஆடு ஜீவிதம் படத்தின் கதை. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

படத்தின் உருக்கமான காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாய் நெகிழச் செய்துள்ளன. இதையடுத்து படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் இந்த படம் இதுவரை 75 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். மலையாள சினிமாவில் மிக விரைவாக 75 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற பெருமையை ஆடு ஜீவிதம் பெற்றுள்ளது. விரைவில் 100 கோடி வசூலை இந்த படம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

நமது உண்மை… நமது வரலாறு.. ராமாயணம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட யாஷ்..!

மார்கோ 2 கண்டிப்பாக வரும்.. தயாரிப்பு நிறுவனம் உறுதி!

நான் சொன்னதைக் கேட்ட பாலு மகேந்திரா.. என் மேல் கோபமான வெற்றிமாறன்… இயக்குனர் ராம் பகிர்ந்த சம்பவம்!

ஸ்ரீகாந்த்& கிருஷ்ணாவின் ஜாமீன் வழக்கு…தீர்ப்பை ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments