பிரேமம் ரீமேக் உரிமை வாங்குவதில் சிக்கல்
பிரேமம் ரீமேக் உரிமை வாங்குவதில் சிக்கல்
மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற பிரேமம் படத்தின் தமிழ் ரீமேக்கை வாங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
மலையாளப் படமான பிரேமம் சென்னையில் 300 நாள்களை கடந்து ஓடியது. அந்தளவுக்கு ரசிகர்களை கவர்ந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய பலரும் போட்டா போட்டி போட்டு வருகின்றனர். அதில் ஒரு நிறுவனம், சிம்பு நடிக்க பாண்டிராஜை வைத்து பிரேமத்தை தமிழில் ரீமேக் செய்வது என முடிவு செய்து பாண்டிராஜை அணுகியது. அவரும் சிம்புவை வைத்து பிரேமத்தை தமிழில் ரீமேக் செய்ய ஒப்புக் கொண்டார்.
ஆனால், எதிர்பாராதவிதமாக அந்நிறுவனத்தால் பிரேமத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்க முடியவில்லை. அதனால், பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்திலேயே கைவிடப்பட்டது.
தெலுங்கில் பிரேமம் படத்தை ரீமேக் செய்து வருகின்றனர். அப்படியிருக்கையில், இதுவரை பிரேமம் தமிழ் ரீமேக் உரிமை யாருக்கும் தரப்படவில்லை என்பது ஆச்சரியம்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்