Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூட்டோடு சூடாக பிரேமலு 2 ஆம் பாகத்தை அறிவித்த தயாரிப்பாளர்கள்!

vinoth
சனி, 20 ஏப்ரல் 2024 (07:21 IST)
கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் அங்கு வெளியான பிரேமலு, ப்ரமயுகம் மற்றும் மஞ்சும்மள் பாய்ஸ் ஆகிய மூன்று திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இதில் மிகச்சிறிய பட்ஜெட்டில் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து உருவான பிரேமலு திரைப்படம் தற்போது வரை 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலை அள்ளியுள்ளது.

பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் வளர்ந்து வரும் நடிகர்களான நஸ்லின் மற்றும் மமிதா பைஜு ஆகியோரை வைத்து ஒரு அழகான பீல்குட் கதையாக இந்த படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர். இந்த படத்தில் நடித்திருந்த நஸ்லின் மற்றும் மமிதா பைஜு ஆகிய இருவரும் இப்போது சென்சேஷனல் நடிகர்களாகியுள்ளனர். கேரளா தாண்டியும் உள்ள மலையாள ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தமிழகத்தில் இந்த படத்தின் மலையாள வெர்ஷனே மிகப்பெரிய அளவில் வசூலித்தது. மறுபடி தமிழ் டப்பிங் ரிலீஸாகி அதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்த படம் ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments