மிகுந்த கவலையில் பிரசன்னா.... தல கண்டிப்பாக கூப்டுவாரு - ஆறுதல் கூறும் அஜித் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 21 ஜனவரி 2020 (12:25 IST)
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. படத்தில் ஹீரோவை தவிர பிற நடிகர்கள், ஏன் ஹீரோயின் குறித்த விபரம் கூட இதுவரை வெளியாகவில்லை. படத்தை குறித்த அத்தனை விஷயங்களையும் படக்குழு மிகவும் ரகசியமாக பேணி காத்து வருகின்றனர். 
இருந்தாலும் எப்படியோ படத்தை குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து பரவி வருகிறது. அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வலிமை படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிகர் பிரசன்ன நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி தீயாக பரவியது. மேலும், பிரசன்னா தீவிர உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்து கட்டாண உடல் தோற்றத்தில் தோன்றியதால் அந்த வதந்திகள் உண்மை என அஜித் ரசிகர்கள் நம்பினர் . இருந்தாலும் அதிகாரபூர்வ தகவலுக்காக காத்திருந்த வேளையில் தற்போது ஷாக்கிங்கான ஒரு ஸ்டேட்மென்ட்டை பிரசன்னா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 
 
அதில், “வலிமை படத்தில் அஜித்துடன் நான் நடிக்க வேண்டும் என்று பலரும் விரும்பி எனக்கு வாழ்த்து சொன்னீர்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்தது என்னவோ  உண்மைதான். என்னுடைய திரைவாழ்க்கையில் மிகப்பெரிய அறிவிப்பாக இச்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் துரதிருஷ்ட வசமாக அந்த வாய்ப்பு எனக்கு இந்தமுறை கிடைக்கவில்லை. மிக விரைவில் தல அஜித்துடன் இணைந்து படம் நடிப்பேன் என்று நம்புகிறேன். அஜித்துடன் நடிக்க முடியாததனால் கொஞ்சம் வருத்தம் இருக்கிறது.  அதைவிட உங்களுடைய அன்பால் இதிலிருந்து மீண்டு விட்டது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என அந்த அறிக்கையில் பிரசன்னா தெரிவித்துள்ளார். இதனை கண்ட அஜித் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Lik படத்தின் டிஜிட்டல் வியாபாரத்தில் மீண்டும் ஒரு சிக்கலா?... ரிலீஸ் தேதி மாறுமா?

கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியையே மீண்டும் ஷூட் செய்கிறதா படக்குழு?

மூன்று நாட்களில் ‘காந்தா’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணைந்த சாய் அப்யங்கர்!

பிரபுதேவா & ரஹ்மான் கூட்டணியின் ‘Moon walk’ படத்தின் இசை உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments