Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சண்டையெல்லாம் நானே சொந்தமா போட்டேன் - பெருமித ப்ரணித்தா

சண்டையெல்லாம் நானே சொந்தமா போட்டேன் - பெருமித ப்ரணித்தா
, வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (14:54 IST)
சகுனியில் அறிமுகமாகி சகுனம் சரியில்லாமல் தமிழ் சினிமாவில் நிலைக்காமல் போனவர் ப்ரணித்தா. கடைசியாக அவரைப் பார்த்தது மாஸ் படத்தில் சின்ன வேடத்தில்.
 
ஆந்திராவில் பரவாயில்லை. அவ்வப்போது ப்ரணித்தாவை பயன்படுத்திக் கொள்கிறார்கள். டைனமைட் என்ற படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
 
விஷ்ணு மஞ்சு தயாரித்து நடிக்கும் டைனமைட் நம்மூர் அரிமா நம்பியின் தெலுங்கு ரீமேக். இயக்கம், தேவ கட்டா.
 
இந்தப் படத்தில் நாற்பதடி உயரத்திலிருந்து குதிப்பது, டேபிளின் கீழே சறுக்கிப் பாய்வது என்று எல்லா சண்டைக் காட்சிகளையும் நானே சொந்தமா செய்தேன் என்றார் ப்ரணித்தா. இந்த அதிரடியில் ப்ரணித்தாவின் அழகான தோலில் பல சிராய்ப்புகள். ஆனாலும், விடாமல் சொந்தமாக சண்டையிட்டேன் என்றார்.
 
சம்பளம் ஒழுங்கா தந்தார்களா?

Share this Story:

Follow Webdunia tamil