Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லவ் டுடே செண்ட்டிமெண்ட்… டிராகன் படத்துக்கு ரிலீஸ் தேதி குறித்த படக்குழு!

vinoth
வெள்ளி, 24 மே 2024 (09:35 IST)
தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் புரொடக்சன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தற்போது விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தை தயாரித்து வரும் நிலையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தை ’ஓமை கடவுளே என்ற திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கிய நிலையில் முதல் கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கட்ட ஷூட்டிங்கை நடத்தி முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் லவ் டுடே திரைப்படம் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதனால் அதே நவம்பர் மாதத்தில் டிராகன் படத்தையும் ரிலீஸ் செய்ய வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

பாலைவனத்தில் க்யூட்டான போட்டோஷூட்டை நடத்திய மாளவிகா மோகனன்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர்தான்.. கழட்டிவிடப்பட்ட தேசிங் பெரியசாமி!

அருள்நிதி நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் பேஷன் ஸ்டுடியோஸ்!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தில் வில்லனாகும் இரண்டு முன்னணி நடிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments