Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரி 2 படத்தில் பிரபுதேவா!

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2018 (17:05 IST)
பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் மாரி 2. தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், சாய் பல்லவி ஹீரோயினாக  நடிக்கிறார். 
மேலும், வரலட்சுமி, டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா தனுஷின் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரபு தேவாவிற்கு ஒரு பங்கு உள்ளது. அதாவது, படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு, பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். 
 
இந்த தகவலை தனுஷ் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்தியாவில் நடனம் வளர்வதற்கு காரணமான பிரபுதேவா, மாரி 2 படத்தில் எங்களுக்காக ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். அவருடைய மேஜிக்கைப் பார்த்து வளர்ந்த எனக்கு, இது மிகப்பெரிய தருணம், நன்றி சார் என போட்டோவோடு பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments